திரையரங்கில் வெளியாகும் “அரசன்” புரோமோ…
சிறு வயது முதல் தற்போது வரை ஸ்டைலிஸ் நடிகராக வலம் வருபவர்தான் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு.
இவரது படங்கள் வெற்றியோ தோல்வியோ இவர் வந்தாலே போது மக்கள் கூட்டம் அலையென கூடும்.
இவரது அடுத்த படமான வெற்றிமாறன் – சிம்பு கூட்டணிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள்.
இந்த நிலையில், குறித்த படத்தின் திரையரங்க புரோமோ குறித்து நடிகர் சிம்பு உற்சாகமாகப் பதிவிட்டுள்ளார்.
இதன் புரோமோ இன்று மாலை 6 மணிக்கு சில திரையரங்குகளில் வெளியாகிறது. யூடியூப்பில் நாளை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கேங்ஸ்டர் கதையாக அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் புரோமாவுக்கான டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்று வருவதால் சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
இந்த புரோமோ 5 நிமிடம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது பற்றி சிம்பு கூறியுள்ளதாவது:
எனதருமை ரத்தங்களே! வெற்றி மாறன் சாரின் திரையரங்குக்கான அரசன் பட புரோமோவை இசையுடன் கண்டு களித்தேன்.
நான் சொல்றேன். நேரம் கெடைச்சா தியேட்டரில் பாருங்கள். திரையரங்க அனுபவத்தை தவறவிடாதீர்கள். அவ்வளவு மதிப்புடையது என்றார்.






