இலங்கையில் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஒப்புதல்!
இலங்கையில் 12.02.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவைத் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, சட்டமா அதிபரினால் குறித்த சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு அதன் பின்னர் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரான் அலஸ் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.





