செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சாதிக்க Apple, Meta நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம்
தொழில்நுட்பத் துறையில் பிரபலங்களான Apple, Meta நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு அம்சத்தில் ஒத்துழைப்பு பற்றிப் பேசிவருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
Meta நிறுவனம் Apple-இன் iPhone கைபேசிகளிலும் இதர கருவிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்ட Facebook தளத்தை ஒருங்கிணைக்கப் பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Apple நிறுவனம் அதன் சொந்தச் செயற்கை நுண்ணறிவு அம்சங்களைக் கொண்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட, சிக்கலான, பணிகளைச் செய்ய உதவும் தொழில்நுட்பத்தை அதன் பங்காளிகளிடம் நாடுகிறது.
அவ்வாறு Apple, Meta நிறுவனங்கள் ஒத்துழைக்க நேரிட்டால், அவற்றுக்கு இடையே மிக அரிய பங்காளித்துவமாக அது அமையக்கூடும்.





