ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த போன் மாடலுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்த முடிவு
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த போன் மாடலுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் Chat GPT சேவையை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற டெவலப்பர்கள் மாநாட்டில் இது அறிவிக்கப்பட்டது.
ஆப்பிளின் ios இயங்கு மென்பொருளில் உள்ளடங்கியிருக்கும் ‘Siri’ அப்ளிகேஷன் மூலம் இதுவரை சேர்க்கப்படாத குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் மூன்றாம் தரப்பு போன் அப்ளிகேஷன்களை இயக்கும் வசதியை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
நிறுவனத்தின் கூற்றுப்படி, செயற்கை நுண்ணறிவு மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்க முடியும்.
இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் தனது கையடக்கத் தொலைபேசிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியமைக்கு டெஸ்லா மற்றும் ‘எக்ஸ்’ நிறுவனங்களின் உரிமையாளரான எலோன் மஸ்க் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
டேட்டா பாதுகாப்புக்காக தனது நிறுவனங்கள் ஐபோன்களை பயன்படுத்துவதை நிறுத்தும் என அவர் எச்சரித்துள்ளதாக செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
“உங்கள் தரவை OpenAI க்கு ஒப்படைத்தவுடன், உண்மையில் என்ன நடக்கிறது என்று ஆப்பிளுக்கு தெரியாது,” என்று அவர் கூறினார்.
மேலும், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது போட்டியாளரான ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பை ‘எக்ஸ்’ செய்தி மூலம் கேலி செய்துள்ளது.
இருப்பினும், இந்த கூற்றுகளுக்கு ஆப்பிள் இன்னும் பதிலளிக்கவில்லை.