மொராக்கோவில் (Moroccan) இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்புகள் – பலர் பலி!
மொராக்கோவின் (Moroccan) ஃபெஸ் (Fez) நகரில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 04 மாடி குடியிருப்புகள் இரண்டு இவ்வாறு இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதில் சுமார் 08 குடும்பங்கள் வசித்து வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த கட்டிடங்கள் பல ஆண்டுகளாக சேதமடைந்திருந்த நிலையில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.




