நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட தொல்பொருட்கள்
ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 06 தொல்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
1756ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு டச்சுக்காரர்களால் கடத்தப்பட்ட மகுல் வாள், லெவ்கே மஹா திசாவவின் இயந்திர துப்பாக்கி உள்ளிட்ட 06 கலைப்பொருட்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புத்த சாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹோபாக் மற்றும் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து இந்த கலைப்பொருட்களை பெற்றுக்கொண்டனர்.





