இலங்கையில் அச்சுறுத்தும் மற்றுமொரு பாதிப்பு!
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அதிகாரிகள் இது தொடர்பில் எச்சரித்துள்ளனர்.
இவ்வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 39 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு இலங்கையில் இதுவரை 66,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.
கண்டி, கொழும்பு, நுகேகொட, கொதட்டுவ, கம்பஹா மற்றும் அத்தனகல்ல பிரதேசங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)