இலங்கை

பிரான்ஸில் பதற்றம் தனிவதற்குள் மற்றுமொரு இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொலை

பிரான்ஸில் Nahel எனும் இளைஞன் பொலிஸாரால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மற்றுமொரு இளைஞன் கொல்லப்பட்டுள்ளார்.

வன்முறையில் ஈடுபட்டிருந்த 27 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை இரவு Marseille நகரில் இச்சம்பவம் இடம்பெற்றது.

Marseilleயிக் மத்திய நகரில் உள்ள Cours Lieutaud பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு பலத்த வன்முறை இடம்பெற்றது.

பொலிஸார் குவிக்கப்பட்டு வன்முறையாளர்கள் கலைக்கப்பட்டனர். அதன்போது 27 வயதுடைய ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

கலவரம் அடக்குவதற்கு பயன்படுத்தப்படும் இறப்பர் குண்டுகளால் செய்யப்பட்ட LBD எனும் துப்பாக்கியினால் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்ட நிலையில் , 27 வயதுடைய வன்முறையாளர் ஒருவர் படுகாயமடைந்தார். அதையடுத்து அவருக்கு இருதய வெடிப்பு ஏற்பட்டு அவர் பலியானார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்