பூமியை போலவே தோற்றமளிக்கும் மற்றுமொரு கோள் கண்டுப்பிடிப்பு!
பூமியை போலவே இருக்கும் ஒரு வெளிப்புறக் கோளை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
HD 137010 b என்று அழைக்கப்படுகின்ற இந்த கோளானது செவ்வாய் கிரகத்தை விடக் குளிராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
நாசாவின் ஓய்வுபெற்ற கெப்லர் (Kepler) விண்வெளி தொலைநோக்கியின் தரவுகளைப் பயன்படுத்தி குறித்த கோள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது 146 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியனைப் போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இந்த அமைப்பானது பூமியின் வெப்பத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே பெறுவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கார்பன் டை ஆக்சைடு நிறைந்த வளிமண்டலம் அதை மிதமானதாக மாற்றக்கூடும் என்றாலும், மேற்பரப்பு வெப்பநிலை -68 டிகிரி செல்சியஸைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலெக்சாண்டர் வென்னர் (Alexander Venner) தலைமையிலான ஒரு சர்வதேச குழு, தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸில் (The Astrophysical Journal Letters) தொடர்புடைய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது,





