மற்றொரு கோடீஸ்வரர் டைட்டானிக் சிதைவுகளை சுற்றிப்பார்க்க புறப்படுகிறார்
டைட்டன் என்ற சிறிய வகை நீர்மூழ்கிக் கப்பலுடன் டைட்டானிக் கப்பலின் எச்சங்களை பார்வையிடச் சென்ற பிரித்தானிய கோடீஸ்வரர் உட்பட 5 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவரும் பயணத்தில் ஈடுபடத் தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டைட்டானிக் இடிபாடுகளை ஆராய.
அமெரிக்காவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான 74 வயதான லாரி கானர் மற்றும் அவரது உதவியாளர் Patrick Lahey ஆகியோர் இந்த பயணத்தில் சேர தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
ஓஹியோவில் வசிக்கும் இந்த கோடீஸ்வரர், கடந்த ஆண்டு சிதைவுகளை பார்வையிடச் சென்றபோது உயிரிழந்த Oceangate நிறுவனத்தின் உரிமையாளர் Stockton Rush போன்ற சாகச நடவடிக்கைகளுக்கு அடிமையானவர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடக்கு அட்லாண்டிக்கில் கடலுக்கு அடியில் 12,000 அடிக்கு கீழ் புதைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளையும், கடந்த ஆண்டு கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளையும் ஆராய்வதுதான் லாரி கானரின் நோக்கம்.
20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட ட்ரைடன் என்ற சிறிய வகை நீர்மூழ்கிக் கப்பலில் இவர்களின் பயணம் மேற்கொள்ளப்படும் என்றும், அமெரிக்காவில் கடல் ஆய்வு சான்றிதழ் கிடைத்தவுடன் பயணம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
தனியார் விண்வெளி வீரர் என நாசாவால் சான்றளிக்கப்பட்ட இந்த கோடீஸ்வரர் முன்பு விண்வெளி நிலையத்திற்குச் சென்று பசிபிக் பெருங்கடலில் 20,000 அடி ஆழத்தில் மூழ்கியவர். அபாயகரமான ஃபார்முலா கார் பந்தயங்களிலும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.