இலங்கை செய்தி

இலங்கைக்கு அருகே மற்றுமொரு ஈரான் கப்பல்!

இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் மற்றொரு ஈரானிய கப்பல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
“ அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சகமும் கப்பலின் இருப்பை அறிந்துள்ளது. அதில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும்.” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ மேற்படி கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் இல்லை. அது பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் உள்ளது.

கப்பலில் உள்ளவர்களின் உயிர்கள் தொடர்பாக அதிகபட்ச தலையீட்டை வழங்குவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பணியை முடித்தவுடன் அது பற்றி மேலதிக தகவல் வழங்கப்படும்.” என அமைச்சர் மேலும் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!