சிங்கப்பூரில் அதிகரிக்கும் மற்றுமொரு கட்டணம்!
சிங்கப்பூரில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வீடுகளிலிருந்து குப்பைகளை அகற்றுவதற்கான கட்டணம் உயரவிருக்கிறது.
பொதுக் கழிவுச் சேகரிப்புத் திட்டத்தில் கழக, தனியார் அடுக்குமாடி வீடுகளுக்கான கட்டணம் 39 காசு உயர்ந்து 10 வெள்ளி 20 காசாகும். தரை வீடுகளுக்கான கட்டணம் ஒரு வெள்ளி 33 காசு கூடி 34 வெள்ளியாகும்.
சிங்கப்பூரின் ஒட்டுமொத்தக் கழிவு நிர்வாக முறை நீண்டகாலம் சீராய்ச் செயல்படுவதைக் கட்டண உயர்வு உறுதி செய்யும்.
நிரந்தரப் பொருள், சேவை வரிப் பற்றுச்சீட்டு, உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின் U-SAVE பற்றுச்சீட்டு ஆகியன கழக வீடுகளில் வசிப்போர் கட்டண உயர்வைச் சமாளிக்க உதவும்.
வீடுகளிலிருந்து குப்பை சேகரிப்பதற்கான கட்டணம் ஈராண்டுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படுகிறது.
நடைமுறைச் செலவு, ஊழியர் சம்பளம் ஆகியவற்றால் கடந்த சில ஆண்டுகளில் சராசரி பொதுக் குப்பைச் சேகரிப்புக் கட்டணம் உயர்ந்திருக்கிறது.