தாய்லாந்தில் மற்றுமொரு கிரேன் விழுந்து விபத்து – 02 பேர் பலி!
தாய்லாந்தின் பாங்காக்கிற்கு (Bangkok) அருகே ஒரு பரபரப்பான சாலையில் கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட கிரேன் ஒன்று சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 05 பேர் காயமடைந்துள்ளனர்.
சமுத் சகோன் (Samut Sakhon) பகுதியில் உள்ள ராமா II சாலையில் குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 48 மணிநேரத்தில் தாய்லாந்தில் இடம்பெற்ற இரண்டாவது கிரேன் விபத்து இதுவாகும். முன்னதாக ரயில் மீது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இதில் 32 பேர் உயிரிழந்திருந்த நிலையில், 80 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





