பொழுதுபோக்கு

நடிகை மட்டும் இல்ல… நடிகையின் அம்மாவிடமும் பாலியல் அத்துமீறல்… இது லிஸ்ட்டுலயே இல்லயே

நடிகைகள் மட்டுமின்றி நடிகை ஒருவரின் தாயிடமும் பிரபல மலையாள நடிகர் முகேஷ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பிரபல மலையாள நடிகை பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார்.

தயாரிப்பு பிரிவில் பணியாற்றுவோரும், நடிகர்களை தேர்வு செய்யும் இயக்குநர்களும் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததுடன் மிரட்டியதாகவும் சந்தியா புகார் தெரிவித்தார்.

மலையாள திரையுலகில் நிலவி வரும் பாலியல் புகார்கள் குறித்து நீதிபதி ஹேமா குழு விசாரணை நடத்தி மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அறிக்கையை அளித்தது.

அந்த அறிக்கையில் பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதால் சிறப்பு விசாரணை குழு விசாரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த குழு செவ்வாய்க்கிழமை விசாரணையை தொடங்கியுள்ளது. புகார்கள் குறித்து விசாரணை தொடங்கியுள்ள நிலையில் 2 நடிகைகள், பிரபல மலையாள நடிகர்களின் பெயர்களை குறிப்பிட்டு மனு அளித்தனர்.

இது பற்றி பேசிய நடிகை சந்தியா, நடிகர் முகேஷ் பாலியல் ரீதியில் தனக்கு தெரிந்த நடிகையிடமும், நடிகையின் தாயிடமும் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். இந்த புகார் தற்போது மலையாள சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!