T-20 போட்டியில் மத்திஷ பத்திரண கலந்துகொள்ளமாட்டார் என அறிவிப்பு!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மத்திஷ பத்திரன இன்று (09.03) பங்குபற்றமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாவது டி20 போட்டியில் நான்காவது ஓவரை வீசும்போது காலில் காயம் ஏற்பட்டது.
காயம் சரியாகாததால் இன்றைய மூன்றாவது போட்டியில் கலந்து கொள்வதில்லை என மதீஷா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்க்கமான மூன்றாவது T20 போட்டி இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
(Visited 11 times, 1 visits today)