அமெரிக்காவில் காரில் சென்ற தாயையும் மகளையும் சுட்டுக்கொலை செய்த மர்ம நபர்கள்!
அமெரிக்காவில் தாயும் மகளும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம் வொர்செஸ்டர் பகுதியில் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.அந்த காரில் சிறுமியுடன் அவரது தாயும் இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மர்மநபர்கள் திடீரென கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் அந்த சிறுமி, தாய் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது 2 பேர் அந்த காரை சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் , மற்ற சந்தேகநபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
(Visited 9 times, 1 visits today)