இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிப்பு!

ஹமாஸ் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பரந்த அளவில் ஏற்றுக்கொண்டுள்ளது என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த உடன்படிக்கையானது ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை எதிர்பார்க்கிறது.
பாலஸ்தீனிய போராளிக் குழு தன்னிடம் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய பணயக்கைதிகளை விடுவிப்பதில் கையெழுத்திட்டால் உடனடியாகத் தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்க இராணுவ சரக்கு விமானங்கள் முற்றுகையிடப்பட்ட காசா பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை வீசத் தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 27 times, 1 visits today)