இந்தியா

இந்திய பிரதமராக மோடி பதவியேற்கும் நேரம் தொடர்பில் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிவிப்பு

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

இதையடுத்து, ஜூன் 9ம் திகதி இரவு 7.15 மணிக்கு மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று ஜனாதிபதி மாளிகை மாளிகை அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னதாக பா.ஜ.க தலைவர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

ஆனால், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரியதையடுத்து, ஜூன் 9ஆம் திகதி இரவு 7.15 மணிக்கு மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

இது குறித்து குடியரசுத்த தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் 9 ஆம் திகதி இரவு 07.15 மணிக்குப் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார் எனக் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், 3-வது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர், இதில் 8,000 க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள்.

தற்போது, இருதரப்பு சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்துள்ளதாகவும், பதவியேற்பு விழா முடிந்து ஒரு நாள் கழித்து விருந்தினர்கள் தங்கள் நாடு திரும்புவார்கள் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் தங்கள் மனைவி மற்றும் மூன்று விருந்தினர்களுடன் வருவார்கள் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏஜென்சிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்த, நிகழ்வுக்கு முன் ஒரு ஒத்திகையை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!