இலங்கை அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!
இலங்கை அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த நாடு தற்போது முன்னேற்றமடைந்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாடு என்ற ரீதியில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் இதற்காக தொழிற்சங்க அமைப்புகளையும் காலத்திற்கேற்ற வகையில் மாற்றங்களுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களுக்கு அரசியல் ரீதியான நியமனங்களினூடாக பணிப்பாளர் சபை நியமிக்கப்படுவதைத் தடுப்பதற்காக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
உரிய திட்டங்களினூடாக நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச்செய்யத் தவறும்பட்சத்தில், நாட்டிற்கு எதிர்காலமொன்று காணப்படாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.