அனிருத் – ஆண்ட்ரியா: மலேசியா மேடையில் மீண்டும் ஒரு மேஜிக்!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் புக்கிட் ஜலில் (Bukit Jalil) தேசிய மைதானத்தில் இன்று (டிசம்பர் 27) மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் அனிருத் தனது இசைக்குழுவுடன் நேரலை கச்சேரி நடத்தினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக, நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமையா மேடைக்கு வந்து அனிருத்துடன் இணைந்து சில பாடல்களைப் பாடினார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவர்கள் இருவரும் ஒரே மேடையில் நேரலையாகப் பெர்ஃபார்ம் செய்தது அங்கிருந்த 85,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகத் தொடங்கின. ரசிகர்கள் இவர்களது பழைய ‘லிப்-லாக்’ சர்ச்சையை நினைவு கூர்ந்து, “இப்பவும் அதே கெமிஸ்ட்ரி தான் போல” என்றும், “Old is Gold” என்றும் சமூக வலைதளங்களில் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.
அனிருத் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் மேடையில் காட்டிய நெருக்கமான நட்பு மற்றும் எனர்ஜியைப் பார்த்து, “பார்க்கப் பார்க்கத் திகட்டாத ஜோடி” என ரசிகர்கள் மீம்ஸ்களைப் பறக்கவிட்டு வருகின்றனர்.
மேலும் இது நடிகர் விஜய்யின் கடைசி அரசியல் ரீதியான ஆடியோ லான்ச் என்பதால் மைதானமே மக்கள் கடலாகக் காட்சியளிக்கிறது.
அனிருத்தின் இசையில் ஆண்ட்ரியா பாடிய பாடல்களுக்குப் பிறகு, விஜய் மேடைக்கு வந்து தனது ரசிகர்களுக்காகப் பேசியது இந்த விழாவின் உச்சக்கட்டமாக அமைந்தது.





