திருகோணமலை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்கப்பட்டு கொலை
திருகோணமலை சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைதி ஒருவரை தூக்கி அடித்து கொலை செய்துள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை கிண்ணியா மஹரப் நகரைச் சேர்ந்த மொஹமட் அலி உவைஸ் மொஹமட் உபயத்துல்லா என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட கைதியும், கொலையைச் செய்த கைதியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
கடந்த (02) கொலையை செய்த கைதி, கொலை செய்யப்பட்ட கைதியை கிண்டல் செய்ததுடன், கிண்டலுக்கு ஆளான கைதி, கிண்டல் செய்த கைதியை தனது தாயை நினைவுபடுத்தி கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
பதிலுக்கு கைதி மற்ற கைதியை தாக்கி அவரை தூக்கி தரையில் வீசினார். அப்போது தாக்கப்பட்ட கைதி சிமெண்டில் தலையில் அடிபட்டு பலத்த ரத்தப்போக்குடன் மயங்கி விழுந்தார்.
கவலைக்கிடமான நிலையில் இருந்த கைதி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் அவர் உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய கைதி கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.