இலங்கை

இலங்கையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் வருடாந்தம் 1இ095 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறப்பதாகவும், இலங்கையில் 5475 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் வைத்தியர் ஜயசூரிய திஸாநாயக்க தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கண்டியில் இன்று (07.03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்இ 08 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.இது மிகவும் வருத்தமளிக்கிறது.

மது, புகைத்தல்,  போதைப்பொருள் பயன்பாடு, உடற்பயிற்சியின்மை,  தவறான உணவுப் பழக்கம் மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரத்த உறவினர்கள் வழியாக இந்த நோய் ஏற்படுகிறது.

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருகிறது. மார்பக புற்றுநோயால் 01 வீதமான ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!