உலக வல்லரசுகளுக்கு இடையேயான பொருளாதார வழித்தடம்
இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி, பல உலக வல்லரசு நாடுகள் கூட்டாக பொருளாதார வழித்தடத்தை உருவாக்கியுள்ளன.
அந்த சக்திகள் அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகும்.
இந்த பொருளாதார வழித்தடத்தின் படி, இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளுக்கு இடையே பெரிய அளவிலான கடல் மற்றும் ரயில் இணைப்பு வழித்தடம் தொடங்கப்படும்.
அதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் இந்தியாவிலும் கையெழுத்தாகி உள்ளது.
அதன்படி, இந்த பொருளாதார வழித்தடம் புதிய இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார பாதை என அழைக்கப்படுகிறது.
ஜி20 மாநாட்டுடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சவூதி அரேபியாவின் பிரதமர் மொஹமட் பின் சல்மான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் கலந்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாடுகளுக்கிடையேயான உள்கட்டமைப்பு ஒத்துழைப்புக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி இதுவாகும்.