மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்! 2000த்தை கடந்த மரணங்கள்
மொரோக்கோவின் மத்தியப் பகுதிகளை உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000த்தை கடந்துள்ளது.
காயமுற்றோர் எண்ணிக்கையும் 2000க்கும் மேல் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் தரைமட்டமாயின.
மொரோக்கோவின் அரச மாளிகை 3 நாள்களுக்குத் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கும்படி அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களில் சுத்தமான குடிநீர், உணவு, கூடாரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்ய ராணுவப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கட்டட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நலையில் தேடல், மீட்புப் பணிகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 15 times, 1 visits today)





