வட அமெரிக்கா

அமெரிக்காவில் மால் ஒன்றில் வானத்தில் இருந்து இறங்கிய ஏலியன்!! பொலிஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் வானத்தில் இருந்து இறங்கி வந்துள்ளதாக, வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு உலக நாடுகளை திரும்பி பார்க்க செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் வானத்தில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, உலக நாடுகளை திரும்பி பார்க்க செய்துள்ளது. அதாவது அமெரிக்க நாட்டில் உள்ள ப்ளோரிடா மாகாணம், மியாமி பகுதியில் மால் ஒன்று அமைந்துள்ளது.

இந்த மாலில் 10 அடி உயரம் கொண்ட ஏலியன் ஒன்று சுற்றித் திரிவதாக திடீரென புகார் எழுந்த நிலையில், அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல் மியாமி மாலுக்கு மேலே ஏலியன்கள் வாகனங்கள் என பரவலாக கூறப்படும் பறக்கும் தட்டுகளின் வெளிச்சம் தென்பட்டதும் இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோவில் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சோதனையின் அடிப்படையில் இந்த வீடியோ மற்றும் ஏலியன் வருகை எல்லாமே சில விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என, தகவல் வெளியாகி உள்ளது.மனிதன் நிலவில் கால் வைத்தது முதல் வேற்றுகிரக வாசிகளை தேடும் ஆராய்ச்சி தொடர்ந்தபடி இருந்தாலும், அவ்வப்போது இதுபோன்ற தகவல் வெளியாவதும் வழக்கமான ஒன்றாகத்தான் உள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!