தமிழ்நாடு

தமிழகத்தை சென்றடைந்த அமித் ஷா – திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ட்ரோன்கள் பறக்க தட

தமிகழகத்தில் 02 நாள் பயணம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி விமான நிலையத்தை சென்றடைந்தார்

அங்கு அவருக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.

அந்தமான் நிக்கோபர் போர்ட் பிளேயர் விமான நிலையத்திலிருந்து இன்று மதியம் பாதுகாப்புத்துறை அமைச்சக விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 2.56 க்கு திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், அர்ஜூன் ராம் மேக்வால், பியூஷ் கோயல், முரளிதர் மொஹல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜய பாஸ்கர், ஆர்.காமராஜ், மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி, ஜெ.சீனிவாசன், பாஜக நிர்வாகிகள் பாலாஜி சிவராஜ், மணிமொழி, விஹெச்பி நிர்வாகி முருகேசன், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கணேசன், நேருதாசன், திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகர காவல் ஆணையர் என்.காமினி உள்ளிட்ட 18 பேர் வரவேற்றனர்.

புதுக்கோட்டை கருவேப்பிலான் கேட் பகுதியில் நடைபெற்ற தமிழக பாஜக தலைவர் மேற்கொண்டுள்ள தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

அமித் ஷா வருகையை முன்னிட்டு திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் 2 மாவட்டங்களிலும் உச்சக்கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Sainth

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!