இன்றைய முக்கிய செய்திகள் கருத்து & பகுப்பாய்வு

டூம்ஸ்டே வால்மீனால் அழிவடைந்த அமெரிக்காவின் புரதான நகரம்!

அமெரிக்காவில் 12,800 ஆண்டுகளுக்கு முன்பு நன்கு செழிப்புற்றிருந்த ஒரு கலாச்சாரத்தை பேரழிவு தரும் அண்ட நிகழ்வு அழித்திருக்கலாம் என்பதை தற்போது கண்டறியப்பட்டுள்ள புவியியல் சான்றுகள் குறிப்பிடுகின்றன.

கலிபோர்னியா, அரிசோனா மற்றும் நியூ மெக்ஸிகோவில் வண்டல் மாதிரிகளை பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், கிமு 10,800 க்கு முந்தைய தீவிர அழுத்தத்தின் கீழ் சிதைந்த கனிம தானியங்களை கண்டுப்பிடித்துள்ளனர்.

விண்கல் தாக்கம் அல்லது பெரிய அளவிலான வளிமண்டல வெடிப்பு போன்ற திடீர்,  அழுத்தங்களுக்கு தாதுக்கள் உட்படுத்தப்படும்போது குவார்ட்ஸ் உருவாகிறது.

The team identified shocked quartz (pictured) in the samples, which forms when minerals are subjected to sudden, intense pressures such as those generated by a meteorite impact or large-scale atmospheric explosion

இந்த பொருள் உருவாகுவதால்   கண்டத்தின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டிருக்கலாம் எனவும், இதனால்  அப்பகுதியில் சுற்றித் திரிந்த பல பெரிய பனி யுக விலங்குகளை அழித்திருக்கலாம் என்பதைக் குறிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்காலப்பகுதியில் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய வேட்டைக்காரர் கலாச்சாரம் இருந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.  இது பல நூற்றாண்டுகளாக வட அமெரிக்காவின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

தொல்பொருள் சான்றுகள் இந்த காலத்திற்குப் பிறகு அவர்களின் தனித்துவமான கல் கருவிகள் பதிவிலிருந்து திடீரென மறைந்துவிட்டதாகக் காட்டுகின்றன எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரபல எழுத்தாளர் கிரஹாம் ஹான்காக் உட்பட சில ஆராய்ச்சியாளர்கள், ஒரு பெரிய ‘டூம்ஸ்டே வால்மீன்’ பூமியின் வளிமண்டலத்தின் வழியாகச் சென்றது, இது சூரிய ஒளியைத் தடுத்தது, கடல் நீரோட்டங்களை சீர்குலைத்தது மற்றும் வடக்கு அரைக்கோளத்தை திடீரென மூழ்கடித்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை