அமெரிக்காவில் இளஞ்சிவப்பு நிறமாகிய குளம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அமெரிக்காவில் குளம் ஒன்று திடீரென இளஞ்சிவப்பு நிறமாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹவாயி மாநிலத்தில் உள்ள மாவீ (Maui) வட்டாரத்தின் கீலியா (Kealia) குளம் வறட்சியால் அவ்வாறு மாறியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அந்த நீரில் இறங்கவோ அதைக் குடிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். குளம் இருக்கும் தேசிய வனவிலங்குக் காப்பகத்தின் ஊழியர்கள் சென்ற மாதம் 30ஆம் திகதியிலிருந்து குளத்தின் நீரைக் கண்காணிக்கின்றனர்.
Halobacteria என்னும் உயிரினத்தால் நீரின் நிறம் மாறியிருக்கலாம் என்று ஆய்வுக்கூட முடிவுகளில் தெரிந்தது.
அதிகமான அளவு உப்பு கொண்ட நீரில் அந்த உயிரினம் வாழ்கின்றது. பல முறை வறட்சி ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை யாரும் அந்தக் குளம் இளஞ்சிவப்பு நிறமாகிப் பார்த்ததில்லை. இப்போது அதைக் காணப் பலரும் பூங்காவில் கூடுகின்றனர்.
(Visited 14 times, 1 visits today)