விண்வெளியில் இருந்து தெரியும் அமெரிக்காவின் பச்சை நதி – பொது மக்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நதி பச்சை நிறத்துக்கு மாறியுள்ளதனை விண்வெளியிலிருந்து கண்டதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
Clear Lake என்று அழைக்கப்படும் கலிபோர்னியாவின் மிகப்பெரிய நதி பாசியால் நிரம்பியுள்ளது.
அங்கு வழக்கத்தைவிட அதிகளவில் cyanobacteria இருப்பதால் நதி நிறம் மாறியிருப்பதாக ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அக்கம்பக்கத்தில் உள்ள பண்ணைகள், சுரங்கங்கள் போன்றவற்றின் கழிவுகள் நதியில் கலக்கப்படுவதால் தண்ணீரின் தரம் குறைந்து வருகின்றது.
அத்தகைய நீரில் உருவாகும் பாசியால் மனிதர்களும் விலங்கினங்களும் பாதிக்கப்படலாம் என்று ஆய்வு நிலையம் கூறியது.
தற்போது நதியில் எவ்வளவு நச்சு உள்ளது என்பதை ஆராயச் சோதனை நடத்தப்படுவதாகவும் நதியை நெருங்கவேண்டாம் என அங்கு வரும் மக்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 22 times, 1 visits today)