அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கு – ரஷ்யா, சீனாவின் ஆதரவில் கூடும் ஐ.நா சபை!
வெனிசுலா மீது அமெரிக்கா முன்னெடுத்த தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“பாதுகாப்பான, சரியான மற்றும் நியாயமான மாற்றத்தை நாம் செய்யக்கூடிய காலம் வரை” வொஷிங்டன் வெனிசுலாவை வழிநடத்தும் என ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.
ட்ரம்ப் அங்கு எவ்வாறான அரசியலை கொண்டுசெல்வார் என்பது தொடர்பில் தெளிவான விளக்கங்கள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவுடன் 15 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலின் கூட்டத்தை நடத்துமாறு பல நாடுகளின் இராஜதந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையிலேயே நாளை தினம் ஐ.நா கவுன்சில் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அக்டோபர் மற்றும் டிசம்பரில் இரண்டு முறை கூடியிருந்தது. இருப்பினும் ட்ரம்ப் ஐ.நாவின் சட்டவிதிகளை மீறி தாக்குதலை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





