ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்ட அமெரிக்கர் கைது
பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் வசிப்பவர்கள் இருவர், ஜூலை மாதம் யூத கட்டிடங்களை நாசப்படுத்தியது தொடர்பான வெறுப்புக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான மொஹமட் ஹமாத், தன்னை “ஹமாஸ் செயற்பாட்டாளர்” என்று அடையாளப்படுத்திக் கொண்டார்.
அமெரிக்க-லெபனான் இரட்டை குடியுரிமை பெற்றவரும் பென்சில்வேனியா ஏர் நேஷனல் காவலர் உறுப்பினருமான ஹமாத், தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் வெடிபொருட்களை வாங்கி சோதனை செய்ததாக குற்றப் புகார் விவரித்துள்ளது.
தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவாக இருந்த ஹமாத், இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடுகளுக்கு பெயர் பெற்ற முற்போக்கு ஜனநாயக கட்சியினருக்கு நன்கொடை அளித்ததாக கூறப்படுகிறது.
(Visited 3 times, 1 visits today)