புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையிறக்கப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் – பறவை மோதியதால் வீபரீதம்!
வட கரோலினாவின் சார்லோட் நகருக்குச் செல்லும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், அதன் இயந்திரத்தில் பறவை ஒன்று மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து ஏர்பஸ் ஏ321 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளது.
பறவையொன்று விமானத்தின் இறக்கைகளை மோதிய நிலையில் குறித்த விமானம் விமானம் விரைவாக குயின்ஸில் உள்ள ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
விமானம் 1722 முதலில் சார்லோட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது, ஆனால் லாங் ஐலேண்டின் கடற்கரையை கடந்த பிறகு நியூயார்க்கிற்கு திருப்பி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
பறவை தாக்குதலால் முதன்மை இயந்திரத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டதால், விமானம் அதன் இரண்டாம் நிலை இயந்திரத்தில் மட்டுமே அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தால் பயணிகளுக்க எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.