மற்றுமோர் கப்பலை குறிவைத்து தாக்கிய அமெரிக்கா : 05 பேர் உயிரிழப்பு!
போதைப்பொருள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட இரண்டு கப்பல்கள் மீது கடந்த 31 ஆம் திகதி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தாக்குதல் எங்கு முன்னெடுக்கப்பட்டது என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அமெரிக்கப் படைகள் கடந்த மூன்று மாதங்களாக கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் கடற்பகுதிகளில் இவ்வாறான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த தாக்கதல்கள் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு எதிரானது எனக் கூறப்பட்டாலும், சமூக ஆர்வலர்கள் அமெரிக்காவின் மேற்படி நடவடிக்கையை விமர்சித்து வருகின்றனர்.





