சிரியாவில் இஸ்லாமிய குழுக்கள் மீது மற்றுமொரு தாக்குதலை முன்னெடுத்த அமெரிக்கா!
சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு (IS) குழுவின் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் கூட்டாளிப் படைகளும் பெரிய அளவிலான தாக்குதல்களை நேற்று நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (Centcom) அறிவித்துள்ளது.
சிரியாவில் அமெரிக்கப் படைகள் மீது IS குழு நடத்திய கொடிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டாளிப் படைகளைப் பாதுகாக்கவும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று Centcom தெரிவித்துள்ளது.
20 க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 90 இற்கும் மேற்பட்ட துல்லியமான வெடிமருந்துகள் மேற்படி தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
F-15E கள், A-10 கள், AC-130J கள், MQ-9 கள் மற்றும் ஜோர்டானிய F-16 கள் உள்ளிட்ட விமானங்கள் தாக்குதல்களில் பங்கேற்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.





