தனது சொந்த நலனுக்காக மற்ற நாடுகளை பகடைகாயாக்கும் அமெரிக்கா!
கிரீன்லாந்தில் தனது நலன்களைப் பேணுவதற்கு அமெரிக்கா மற்ற நாடுகளை “சாக்குப்போக்காக” பயன்படுத்தக்கூடாது என்று சீனா குறிப்பிட்டுள்ளது.
கிரீன்லாந்தை ரஷ்யா அல்லது சீனா கையகப்படுத்துவதைத் தடுக்க, அதை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில் சீனாவின் கருத்துக்கள் வந்துள்ளன.
இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஆர்க்டிக்கில் சீனாவின் நடவடிக்கைகள் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் அவை சர்வதேச சட்டத்தின்படி உள்ளன” என்று கூறியுள்ளார்.
சட்டத்தின்படி ஆர்க்டிக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனைத்து நாடுகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மற்ற நாடுகளை ஒரு சாக்காகப் பயன்படுத்தி அமெரிக்கா தனது சொந்த நலன்களைப் பின்தொடரக்கூடாது எனவும் அவர் அமெரிக்காவை சாடியுள்ளார்.





