சமகால செயற்பாட்டால் அழியப்போகும் அமெரிக்கா! கொந்தளிக்கும் ட்ரம்ப்
அமெரிக்க அரசாங்கம் 35 நாட்களாக முடங்கியுள்ளதற்கு ஜனநாயகக் கட்சியே காரணம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க அரசாங்கம் இவ்வளவு காலம் முடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவை அழிக்கும் முயற்சியில் ஜனநாயகக் கட்சி செயற்படுவதாக ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி முதல் நாடாளுமன்றம் நிதியளிக்க அனுமதி வழங்காமையினால் பல முக்கிய அமைச்சுகள் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன.
சுமார் 1.4 மில்லியன் அரசாங்க ஊழியர்கள் சம்பளம் இல்லாத நிலையில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்காக உதவிக் கொடுப்பனவுகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமகால ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை காமிகாஸி விமானிகளோடு டிரம்ப் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின்போது, காமிகாஸி விமானிகள் எதிரிகளை கொல்லத் தங்களுடைய விமானங்களை வேண்டுமென்றே மோதித் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்.
அதேபோல், ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவை அழிக்க நினைத்தால் அதைச் செய்வார்கள் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.





