இலங்கை

சிறுபான்மையினருக்கு எதிரான மதத்துன்புறுத்தல்கள் குறித்து அமெரிக்கா தகவல்!

2022ஆம் ஆண்டு  இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான மதத்துன்புறுத்தல்கள் குறித்து  மதங்கள் தொடர்பான தமது வருடாந்த சுயாதீன அறிக்கையில் அமெரிக்கா தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் இன,  மத அடிப்படையில் சிறுபான்மையினரை மதித்து நல்லிணக்க செயற்பாட்டின் ஒரு அங்கமாக மதச் சுதந்திரத்தை உள்ளடக்கவேண்டியதன் அவசியத்தை  இலங்கையின் ஜனாதிபதி,  பிரதமர் ஆகியோருடனான சந்திப்புகளின்போது   அமெரிக்க தூதரகம்  வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம்  நீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கு  குறிப்பாக காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நடைமுறையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக  இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!