Green Card பெற காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட அமெரிக்கா
அமெரிக்காவில் Green Card பெறுவதற்கான தகுதிக்கான விதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்கு வழங்கப்படும் ஆவணம் Green Card என அழைக்கப்படுகிறது.
ஆனால் இது கிடைப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 1,40,000 பேருக்கு மட்டுமே Green அட்டைகளை அமெரிக்க அரசு வழங்குகிறது.
அதில் விண்ணப்பிப்பவர்களில் ஒரு நாட்டுக்கு,7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டு ஒதுக்கப்பட்டு வந்தது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றும் நபர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில்,Green Card பெறுவதற்கான விதிகளில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, கடுமையான உடல்நலம் பாதிப்பு, உடல் ஊனம்,வேலை பார்க்கும் நிறுவனத்துடன் வழக்கு உள்ளிட்ட பிரச்னைகளினால் கடுமையான சவாலை சந்திப்பவர்கள் அதற்கான ஆதாரங்களை அளித்தால் அவர்களுக்கு Green Card அளிக்கப்படும் என அந்தநாடு தெரிவித்துள்ளது.