ஈரானின் வான்வெளியை முழுமையாகக் கைப்பற்றிய அமெரிக்கா! அடுத்த இலக்கு இதுதான்!!
ஈரானிய வான்வெளியை அமெரிக்கா முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) CNBC-யிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகள், வரும் நாட்களில் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நிலத்தடி பதுங்கு குழிகளை அகற்றும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஈரானிய மோதலுக்கான தொலைநோக்குப் பார்வை ஜனாதிபதி ட்ரம்பிற்கு இருப்பதாக கூறிய அவர், அனைவரும் பின்வாங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
தாக்குதல் நடத்தும் முடிவைப் பற்றி விவாதித்த பெசென்ட், அமெரிக்கா அதன் இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் ஈரானின் பொருளாதாரத்தால் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சினையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறினார்.




