அமெரிக்கா – டிக்டொக் தொடர்பில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் : ட்ரம்ப் கோரிக்கை!
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தான் பதவியேற்கும் வரை அமெரிக்காவில் டிக்டாக் தடை குறித்து எந்த முடிவையும் தெரிவிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் பதவியேற்ற பிறகு, டிக்டாக் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்குவார் என்று நம்புகிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சீன சமூக ஊடக நிறுவனமான ByteDance ஐ நாடு முழுவதும் தடைசெய்யும் மசோதாவை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியது.
அதன்படி, டிக்டாக் மென்பொருளை நாடு முழுவதும் தடை செய்ய அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புக்கொண்டது.
இத்தகைய பின்னணியில், அமெரிக்க காங்கிரஸின் சட்டத்திற்கு எதிராக பெடரல் நீதிமன்றத்தில் பைடடென்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது, ஆனால் அது சில வாரங்களுக்கு முன்பு நிராகரிக்கப்பட்டது.
அதன்படி, டிக்டொக்கை தடை செய்வதற்கான முடிவு ஜனவரி 10 ஆம் திகதி அறிவிக்கப்படும்.
இந்நிலையில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், தீர்ப்பு அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவர் பதவியேற்ற பிறகு இந்த பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்குவதே ட்ரம்பின் நோக்கம் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஒப்பந்தத்தின்படி, TikTok சேவையை வைத்திருக்கும் சீன நிறுவனமான ByteDance, உடனடியாக தனது பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும்.
இல்லையெனில், அமெரிக்காவில் TikTok பயன்பாடு தடை செய்யப்படும்.
டிக்டோக் மென்பொருள் மூலம் அமெரிக்கர்களின் ரகசியத் தகவல்கள் திருடப்பட்டு சீனாவுக்கு வழங்கப்படுவதாக பெரும்பாலான அமெரிக்க அரசியல்வாதிகள் கருதுகின்றனர்.
இருப்பினும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை 170 மில்லியன் பயனர்களின் சுதந்திரமான பேச்சு உரிமையை மீறுவதாக பைட் டான்ஸ் நிறுவனம் கூறுகிறது.