சிங்கப்பூரில் சாதனை படைத்த தமிழருக்கு அமெரிக்கா வாழ்த்து

சிங்கப்பூரின் 9ஆவது ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு அமெரிக்கா வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் சிங்கப்பூரும் பரஸ்பர மரியாதை, பொதுவான நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நீண்ட, வலுவான உறவைக் கொண்டிருக்கின்றன என்பதை அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் Matthew Miller வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.
அதற்காக தர்மனுடனும் சிங்கப்பூர் மக்களுடனும் இணைந்து செயல்பட அமெரிக்கா ஆவலுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, சிங்கப்பூருக்கு இடையிலான இருதரப்பு உறவுக்குச் சிறந்த பங்களிப்பு வழங்கிய சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்புக்கு மில்லர் நன்றி தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)