லண்டனில் ஆம்புலன்ஸ்கள் தீக்கிரை: மர்ம கும்பல் வெறியாட்டம்!
லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் Golders Green பகுதியில் உள்ள யூத சமூக ஆம்புலன்ஸ் சேவைக்குச் சொந்தமான நான்கு வாகனங்கள் Ambulances மர்ம நபர்களால் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
முகமூடி அணிந்த மூன்று நபர்கள் இந்த ஆம்புலன்ஸ்கள்மீது எரிபொருளை ஊற்றித் தீவைத்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.
இதனை யூத எதிர்ப்பு சம்பவமாக பொலிஸார் கருதி, விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
ஆம்புலன்ஸ்களில் இருந்த எரிவாயு உருளைகள் வெடித்ததில் அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன. எனினும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். தற்போது லண்டன் காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





