2033ஆம் ஆண்டுக்குள் 6 லட்சம் பணியிடங்களில் ரோபோக்களை நியமிக்க அமேசான் திட்டம்!
உலகின் மிகப்பெரிய இணைய விற்பனை நிறுவனமான அமேசான், தனது எதிர்காலச் செயல்பாடுகளில் மனிதப் பணியாளர்களைக் கணிசமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய, ரோபோக்களைப் பயன்படுத்தும் மாபெரும் திட்டத்தை வகுத்துள்ளது.
இதன் மூலம், 2033ஆம் ஆண்டுக்குள் விற்பனையை இருமடங்காக்கவும் அமேசான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அமேசானின் இந்தத் திட்டத்திற்கமைய, விரைவில் 5 லட்சத்துக்கும் அதிகமான வேலைகளில் ரோபோட்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கித் தொழில்நுட்பம் மூலம் தனது 75 சதவீதச் செயல்பாடுகளை மிகக் குறைந்த மனிதப் பணியாளர்களுடன் முன்னெடுக்க அமேசான் திட்டமிட்டுள்ளது.
ரோபோக்களின் பயன்பாடு அதிகரிப்பதால், மனிதப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவது படிப்படியாக நிறுத்தப்படவுள்ளது.
குறிப்பாக, 2027ஆம் ஆண்டுக்குள், அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களில் மனிதர்களை நியமிப்பது
மேலும், 2033ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் ஆறு லட்சம் பேரைப் பணியில் அமர்த்துவது நிறுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரோபோக்களைப் பயன்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு பொருளையும் பொதி செய்து விற்பனை செய்வதில் பணத்தை மீதப்படுத்தலாம் அமேசான் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமேசானின் இந்த நகர்வு தொழில்நுட்பத் துறையிலும் வேலைவாய்ப்புச் சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





