கையடக்க பவர் பேங்குகளை (power banks) மீளப் பெறும் அமேசான் நிறுவனம்!
தீ மற்றும் தீக்காய அபாயங்கள் காரணமாக அமேசானில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட 200,000 க்கும் மேற்பட்ட INIU 10,000mAh கையடக்க பவர் பேங்குகள் (power banks) மீளப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2021 மற்றும் ஏப்ரல் 2022 க்கு இடையில் விற்பனை செய்யப்பட்ட BI-b41 என்ற பவர் பேங்குகளே (power banks) இவ்வாறு மீளப் பெறப்படவுள்ளன.
நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் திரும்பப் பெறுதல் அறிவிப்பை வெளியிட்டது.
இந்த சாதனங்களில் உள்ள லித்தியம்-அயன் பேட்டரிகள் அதிக வெப்பமடைந்து தீப்பற்றக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் 11 தீ விபத்துகள், மூன்று சிறிய தீக்காய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், $380,000 க்கும் அதிகமான சொத்து சேதம் உட்பட சொத்து சேதம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




