அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏறக்குறைய 2200 மாணவர்கள் கைது!
சமீபத்திய வாரங்களில் அமெரிக்கா முழுவதிலும் உள்ள கல்லூரி வளாகங்களில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்களின் போது 2200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18 முதல் 43 வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் 50இற்கும் மேற்பட்ட கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜோ பைடன், மாணவர்களின் அமைதியான போராட்டத்திற்கான உரிமையை பாதுகாத்தார். ஆனால் சமீபத்திய நாட்களின் ஒழுங்கீனத்தை கண்டித்தார்.
காசா பகுதியில் 34,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துமாறு மாணவர்கள் அழைப்பு விடுத்து ஏப்ரல் 17 அன்று கொலம்பியாவில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)