ஊழியர் ஒருவரின் குற்றச்சாட்டு : நடுவிரலை காட்டி பரபரப்பை ஏற்படுத்திய ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாதாரண தொழிலாளி ஒருவரால் மோசமாக விமர்சிக்கப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
மிச்சிகனின் (Michigan) டியர்போர்னில் (Dearborn) உள்ள ஃபோர்டு தொழிற்சாலைக்கு( Ford factory) ட்ரம்ப் பயணித்திருந்தார்.
இந்நிலையில் அங்கு பணியாற்றும் டிஜே சபுலா ( TJ Sabula) என அடையாளம் காணப்பட்ட நபர், எப்ஸ்டீன் கோப்புகளை நிர்வாகம் கையாண்ட விதத்தைக் குறிப்பிட்டு ட்ரம்ப் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர் எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவதூறான வார்த்தையை பிரயோகித்த ட்ரம்ப், நடுவிரலை காட்டி சைகை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் சர்வதேச ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் குறித்த ஊழியர் விசாரணைகளுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மேற்படி சம்பத்தின் போது ட்ரம்பின் செயற்பாடுகளை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ஆதரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





