அமித்ஷா மீது குற்றச்சாட்டு: கனடா தூதருக்கு இந்தியா சம்மன்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து கனேடிய அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதுபோன்ற “அபத்தமான மற்றும் ஆதாரமற்ற” குற்றச்சாட்டுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில், சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் விவகாரத்தில் அமித்ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் கனடா தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.
உள்துறை மந்திரி அமித்ஷா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக கூறி கனடா தூதருக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.
இதனிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை துணை மந்திரி டேவிட் மோரிசன் குற்றஞ்சாட்டினார்.
இந்தியாவை இழிவுபடுத்துவதற்கும் பிற நாடுகளில் செல்வாக்கு செலுத்துவதற்கும் ஒரு நனவான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக கனேடிய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் வேண்டுமென்றே சர்வதேச ஊடகங்களுக்கு ஆதாரமற்ற ஊகங்களை கசியவிட்டதாக வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் இருதரப்பு உறவுகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார் ஜெய்ஸ்வால்.
துணை அமைச்சர் டேவிட் மாரிசன் குழுவின் முன், இந்திய மத்திய உள்துறை அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அபத்தமான மற்றும் ஆதாரமற்ற குறிப்புகளுக்கு இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று (இராஜதந்திர) குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று ஜெய்ஸ்வால் கூறினார்.
ஜூன் 2023 இல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனேடிய சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய அரசின் நம்பகமான ஆதாரங்கள் கனடாவிடம் இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஓராண்டுக்கு முன்பு கூறியிருந்தார்.
குற்றச்சாட்டுகளை அபத்தமானது என்று நிராகரித்த இந்தியா, கனடா ஆதாரங்களைத் தரவில்லை என்று தொடர்ந்து மறுத்தது.