ஜப்பானில் அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லக்கூடிய ரோபோ சிங்கம் அறிமுகம்

ஜப்பான் கவாசாகி மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் ரோபோ சிங்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சவாரி செய்யக்கூடிய ரோபோ சிங்கத்தை சொந்தமாக வைத்திருப்பதை கற்பனை செய்ய முடிகிறதா என்று சவால் விட்டு ரோபோ சிங்கம் ஒன்றை கவாசாகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஜப்பான் ஒசாகா நகரில் கண்காட்சியில் குறிப்பிட்ட ரோபோவை காட்சிப்படுத்தி பார்வையாளர்களை கவரும் வகையில் விளக்கப்படத்தையும் ஒளிபரப்பி வருகிறது.
CORLEO என்று அழைக்கப்படும் ரோபோ சிங்கம், அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லக்கூடிய தனிப்பட்ட போக்குவரத்து வாகனம் ஆகும். ஒவ்வொரு காலிலும் ரப்பர் குளம்பு பொருத்தப்பட்டுள்ளது.
புல்வெளிகள், பாறைப் பகுதிகள் மற்றும் இடிபாடுகள் நிறைந்த பகுதிகளில் நுழையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
(Visited 20 times, 1 visits today)