வடக்கு குயின்ஸ்லாந்தில் வரலாறு காணாத வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் பெய்து வரும் கனமழையினால் நதிகளின் நீர்மட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
கடந்த சில நாட்களில் மட்டும் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ள நிலையில், கால்நடைப் பண்ணைகளில் இருந்து சுமார் 16,450 பசுக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டோ அல்லது காணாமலோ போயுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
டிம்புலா (Dimbulah) பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய ஒருவர் காரிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால், கேப் யார்க் தீபகற்பப் பகுதியில் மழையின் தாக்கம் நீடிக்கக்கூடும்.
ஆற்றுப் பகுதிகளில் நீர்மட்டம் இன்னும் குறையாததால், பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





