புட்டின் – டிரம்ப் சந்திப்பு! கவனம் ஈர்க்கும் ரஷ்ய ஜனாதிபதியின் மர்ம சூட்கேஸ்
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சந்திப்பில், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
டிரம்புடனான சந்திப்பின் போது, புடினின் பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்துச்சென்ற ஒரு விசித்திரமான சூட்கேஸ் கவனத்தை ஈர்த்தது. பாதுகாப்பு வட்டாரங்களில் இது “பூப் சூட்கேஸ்” என கூறப்படுகின்றது.
புட்டினின் உடல்நிலையில் உள்ள தகவல்கள் வெளிவருவதை தடுப்பதற்காக, அவரது மலக்கழிவுகள் சிறப்பு பிளாஸ்டிக் பைகளில் சேகரிக்கப்பட்டு, அந்த சூட்கேஸில் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்படும் என்பது நீண்டநாள் நடைமுறையாகும்.
72 வயதாகும் புடினுக்கு, நரம்பியல் பிரச்சனைகள் உள்ளிட்ட உடல்நலக் குறைகள் இருப்பதாக ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரின் உடல்நிலை பற்றிய எந்த தகவலும் வெளியில் செல்லாதவாறு ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.





